Sunday, December 28, 2008

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் படையினரின் முகாம் மீது குண்டுத் தாக்குதல்: அதிகாரி உட்பட 6 படையினர் பலி; 3 படையினர் உட்பட 15 போ் காயம்

[ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 11:53 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் படை அதிகாரி ஒருவர் உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நான்கு படையினர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வத்தளை கேகித்த கோவில் வீதியில் உள்ள படையினரின் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவித்த அவர், இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் கூறினார்.
இதேவேளை, காயமடைந்த படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, இத்தாக்குதலில் 11 பொதுமக்களும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் ராகம மருத்துவமனையிலும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டு வெடிப்பு இடம்பெற்ற வத்தளை கேகித்தவில் மேலதிக படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

No comments: